இனி போரை இடைநிறுத்தமாட்டோம்! ரஷ்யா அதிரடி அறிவிப்பு
அமைதி பேச்சுவார்த்தைக்காக இனி உக்ரைனில் ராணுவ நடவடிக்கையை ரஷ்யா நிறுத்தாது என வெளியுறவுத்துறை அமைச்சர் Sergei Lavrov தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது தொடர்ந்து 47வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், வெளிநாட்டு தலைவர்கள் கீவ் நகருக்கு சென்று ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்து உதவி தொகுப்புகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் அரசு ஊடகத்திற்கு பேட்டியளித்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் Sergei Lavrov, உக்ரைனுடன் பேச்சுவார்த்தையை தொடராததற்கு எந்த காரணமும் இல்லை.
ஆனால், இரு தரப்பினரும் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் போது, ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை நிறுத்தாது என்று திட்டவட்டமாக தெரவித்தார்.
உக்ரைனில் களமிறங்கிய பிரான்ஸின் முக்கிய படைக்குழு! வெளியான ஆதாரம்
பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையேயான முதல் சுற்று பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி புடின் ராணுவ நடவடிக்கையை இடைநிறுத்த உத்தரவிட்டார், ஆனால் ரஷ்யாவின் நிலைப்பாடு தற்போது மாறிவிட்டது.
உக்ரேனியர்கள் தாக்குதலை இடைநிறுத்த திட்டமிடவில்லை என்று நாங்கள் உறுதியாக நம்பிய பிறகு, இறுதி உடன்பாடு எட்டப்படாத வரை, அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளின் போது, ராணுவ நடவடிக்கையில் இடைநிறுத்தம் இருக்காது என்று முடிவு செய்யப்பட்டது என Sergei Lavrov கூறினார்.