ரஷ்யா சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்த... தகவல்களை மொத்தமாக புறந்தள்ளிய புடின் நிர்வாகம்
நேட்டோ கூட்டமைப்பைத் தாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கத் தயாராக இருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது.
ரஷ்யாவின் சூழ்ச்சி
பிறக்கும் புத்தாண்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மாபெரும் கனவு இதுவென அமெரிக்க உளவுத்துறை அறிக்கை சமர்ப்பித்திருந்த நிலையில், புடின் நிர்வாகம் அதை மொத்தமாக புறந்தள்ளியுள்ளது.

ரஷ்ய வெளிவிவகார துணை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் திங்கட்கிழமை அன்று கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியம் அல்லது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ இராணுவக் கூட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்பதை சட்டத்திற்கு உட்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் மூலம் உறுதிப்படுத்த ரஷ்யா தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
ஆனால், இதுவும் ரஷ்யாவின் சூழ்ச்சி என்றும், அதன் விளக்கங்களை ஏற்பதாக இல்லை என்றும் அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கசிந்துள்ள தகவலின் அடிப்படையில், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் நிலையிலும்,
உக்ரைன் முழுவதையும் கைப்பற்றுவது மற்றும் ஒரு காலத்தில் சோவியத் பேரரசால் ஆளப்பட்ட ஐரோப்பாவின் பகுதிகளை மீண்டும் மீட்பது உட்பட, தனது இறுதிப் போர் இலக்குகளை புடின் கைவிடவில்லை என்றே தெரிய வருகிறது.

ட்ரம்பின் கருத்துக்கு
அமெரிக்க உளவுத்துறையின் இந்த கண்டுபிடிப்புகள் அனைத்தும் விளாடிமிர் புடின் ஐரோப்பாவிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மீண்டும் மீண்டும் மறுக்கும் கருத்துக்களுக்கு நேரடி முரணாக உள்ளது.
அத்துடன், போரை முடிவுக்குக் கொண்டுவர புடின் கடும் முயற்சிகள் மேற்கொள்கிறார் என்ற டொனால்ட் ட்ரம்பின் கருத்துக்கும் முரணாக உள்ளது. இந்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவிக்கையில்,

அந்தத் தகவல்களின் நம்பகத்தன்மையை ரஷ்யாவால் மதிப்பிட முடியவில்லை, ஆனால், அந்த அறிக்கை துல்லியமானதாக இருந்தால், அமெரிக்க உளவுத்துறை முற்றிலும் தவறாக செயல்படுறது என்று உறுதியாக கூற முடியும் என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |