ரஷ்ய நடிகையின் சோக முடிவு: யோகா செய்யும் போது ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு
ரஷ்ய நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா யோகா செய்யும் போது ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய நடிகைக்கு நேர்ந்த சோகம்
ரஷ்ய நடிகையான 24 வயது கமிலா பெல்யாட்ஸ்காயா தனது காதலருடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு கோ சாமுய் கடற்கரையில் பாறை மீது அமர்ந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டிருந்த கமிலா பெல்யாட்ஸ்காயா எதிர்பாராத விதமாக எழுந்த ராட்சத அலையால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.
சம்பவம் நடந்த சில நிமிடங்களில் மீட்பு குழுக்கள் வந்தாலும், கடுமையான கடல் கொந்தளிப்பு காரணமாக அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
பரவும் வீடியோ
இந்த சோக நிகழ்வின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வீடியோவில், கமிலா அமைதியாக தியானம் செய்யும் காட்சியும் பின்னர் அவர் காணாமல் போன இடத்தில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதும் காட்டப்படுகிறது.
கமிலாவின் கடைசி பதிவு
ரஷ்யாவின் இளம் நடிகை கமிலா, தனது சமூக வலைதள பக்கத்தில் கோ சாமுய் கடற்கரையை மிகவும் நேசிப்பதாகவும், இந்த கடற்கரை தான் தான் பார்த்த மிக அழகான இடம் என்று பகிர்ந்துள்ளார்.
ஆனால், அவர் மிகவும் நேசித்த இடமே அவரது வாழ்க்கையின் இறுதி இடமாக அமைந்து இருப்பது கமிலாவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |