உக்ரைனில் சண்டையிட 'உண்மையான ஆண்மகன்' வேண்டும்: ரஷ்யாவின் ஆட்சேர்ப்பு விளம்பரம்!
உக்ரைனில் போரிட அதிக துருப்புக்களை நியமிக்கும் முயற்சியில், ரஷ்ய இராணுவம் ஒரு வீடியோ விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
'உண்மையான ஆண்மகன்' என்பதை நிரூபித்து காட்டு
அந்த விளம்பரத்தில், உக்ரைன் மோதலில் சேர ஆர்வமுள்ள நபர்கள் ஒரு சாதாரண குடிமகன் வாழ்க்கையை வாழாமல், தாங்கள் ஒரு "உண்மையான ஆண்மகன்" என்பதை நிரூபித்து காட்டும்படி சவால் விடுக்கபட்டுள்ளது.
முக்கிய ரஷ்ய சமூக வலைதளங்கள் ஏற்கனவே ஆட்சேர்ப்பு விளம்பரத்தை இயக்கத் தொடங்கியுள்ளன.
ரஷ்ய ஊடகங்கள் மற்றும் பிரித்தானிய இராணுவ உளவுத்துறையின் அறிக்கைகளுக்குப் பிறகு, ரஷ்யா உக்ரைனில் தனது படைகளை மேலும் 400,000 வீரர்களைப் பட்டியலிடுவதன் மூலம் வலுப்படுத்தப் பார்க்கிறது என்று இந்த விளம்பரம் வந்துள்ளது.
East2west News
சர்ச்சை
ரஷ்ய ராணுவ வீரர்களின் உயிரிழப்பு தரவு இன்னும் சரியாக கண்டறியப்படாத நிலையில், உக்ரைன் போரில் பெங்கேற்க ஆட்சேர்ப்பு செய்வைத்து மேலும் சர்ச்சையை கிளப்புகிறது.
அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் சமீபத்திய மதிப்பீட்டின்படி, இதுவரை 43,000 ரஷ்யர்கள் வரை மோதலில் இறந்துள்ளனர் என்று கூறுகிறது. 17,500 உக்ரேனியர்களும் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
East2west News
அந்த விளம்பரத்தில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் ஒரு இளைஞர், உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக இருக்கும் ஒருவர், டாக்சி ஓட்டுநர் போன்ற சாதாரண மக்கள் இராணுவ வீரர்களாக மாறக்கூடிய வாய்ப்புகள் இருப்பது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஆர்வமுள்ளவர்கள் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்துடன் மாதத்திற்கு 204,000 ரூபிள் (இலங்கை ரூ.8,05,500) என்று தொடங்கும் ஊதியத்திற்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு ஆண்களைக் கேட்கும்படி அந்த விளம்பரம் அமைந்துள்ளது.