செங்கடலுக்குள் நுழைந்த ரஷ்ய போர் கப்பல்கள்: உறுதிப்படுத்திய பாதுகாப்பு அமைச்சகம்
செங்கடல் பகுதிக்குள் ரஷ்ய கடற்படை கப்பல்கள் வெற்றிகரமாக நுழைந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கடல் நீர்ப் பகுதிக்குள் ரஷ்ய கடற்படையின்(Russia Pacific fleet) கப்பல்கள் வெற்றிகரமாக நுழைந்து இருப்பதாக அந்நாட்டு கடற்படை சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
பாப் எல்-மண்டேப்(Bab el-Mandeb) நீரிணை வழியாக ரஷ்யாவின் மார்ஷல் ஷபோஷ்னிகோவ்(Marshal Shaposhnikav) போர் கப்பல் மற்றும் போரிஸ் புடோமா(Boris Butoma) என்ற எரிப்பொருள் கப்பல் ஆகிய இரண்டு செங்கடல் நீர்ப்பரப்பை அடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏடன் வளைகுடாவில் முக்கிய செயல்பாடுகள் மற்றும் கடமைகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த இந்த கப்பல்கள் தற்போது செங்கடலுக்குள் நுழைந்துள்ளது.
அக்டோபர் மாதம் விளாடிவோஸ்டோக் துறைமுகத்திலிருந்து கிளம்பிய இந்த கப்பல்கள், நீண்ட கால பயணத்திற்கு பிறகு செங்கடலை வந்தடைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |