போரில் ஆயுதங்களுக்குப் பஞ்சம்! மண்வெட்டியை வைத்துப் போரிடும் ரஷ்ய ராணுவ வீரர்கள்
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போரில் ரஷ்யா ராணுவத்திற்கு ஆயுதங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலான ராணுவ வீரர்கள் மண்வெட்டிகளை வைத்துச் சண்டையிடுவதாகக் கூறப்படுகிறது.
ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே கடந்த ஒரு ஆண்டுகளாகப் போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யப் படைகள் உக்ரைனின் சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ளனர். போரில் ரஷ்ய ராணுவத்திற்குப் பயங்கரமான ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகப்படியாகத் துப்பாக்கியைக் கொண்டே சண்டையிருக்கின்றனர்.
@getty images
மேலும் ரஷ்யாவின் பீரங்கிகள் கூட பற்றாக்குறையாக இருப்பதால் முழுக்க தரைப்படையை நம்பியே முன் நகர்ந்து செல்கிறது. நேருக்கு நேராகச் சண்டையிட்டுக் கொள்ளும் அளவிற்குச் சூழல் உண்டாகிவிட்டதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது . ரஷ்ய ராணுவ வீரர்கள் பெரும்பாலும் மண்வெட்டிகளைக் கொண்டு சண்டையிடுவதாகத் தெரிய வந்துள்ளது.
MPL-50 மண்வெட்டி
MPL-50 என்ற இந்த கருவி 1869 இல் வடிவமைக்கப்பட்டது மற்றும் தற்போது சிறிது மாறிவிட்டதென அமைச்சகம் கூறியுள்ளது. போரின் அனைத்து பகுதியிலும் பயன்படுத்தப்படும் இந்த கருவி தொழில்நுட்ப ரீதியான செலவைக் குறைப்பதோடு போரில் கொடூரமான ஆயுதமாக இருக்கும்” எனப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
NODLYM @Boris Ivanov
சுமார் 4,000 குடிமக்கள் தங்கியிருக்கும் சிறிய நகரத்தை ரஷ்யா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்ததால், பக்முத் நகரம் பல மாதங்களாகச் சண்டையை எதிர் கொண்டுள்ளது.
ரஷ்ய ராணுவத்திற்கு சமீபத்திய மாதங்களில் நகரத்தைக் கைப்பற்றுவது ஒரு அரிய போர்க்கள வெற்றியாக இருக்கும், நகரத்தைக் கைப்பற்றுவதென்பது ஒரு திருப்புமுனையாக இருக்குமென என்று ISW கூறியுள்ளது. இதன் நோக்கம் உக்ரைன் ராணுவம் தயார் செய்து வைத்துள்ள தற்காப்பு நிலைகளைக் கைவிடும்படி கட்டாயப்படுத்துவதாகும்.