அமெரிக்காவால் தேடப்பட்ட இஸ்ரேலிய-கனேடிய நபரைப் பிடித்த ரஷ்யா! மில்லியன் டொலர்கள் மோசடி..வெளியான பின்னணி
அமெரிக்காவால் தேடப்பட்டுவந்த இஸ்ரேலிய-கனேடிய சாரதியை ரஷ்ய அதிகாரிகள் காவலில் வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
Josh Cartu
இஸ்ரேலிய-கனேடிய ரேஸ் சாரதி Josh Cartu (45) சட்டவிரோத ஒன்லைன் பங்கு வர்த்தகத் திட்டத்தின் மூலம், முதலீட்டாளர்களின் மில்லியன் கணக்கான டொலர்களை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார்.
அவர் 2013 மற்றும் 2018க்கு இடையில் Binary Options என அறியப்படும் ஒன்லைன் முதலீட்டுத் திட்டங்கள் மூலம், வாடிக்கையாளர்களுக்கு 165 மில்லியன் மோசடி செய்ததாக 2020ஆம் ஆண்டில் The U.S. Commodity Futures Trading Commission கூறியது.
அதேபோல், Cartu தனது சகோதரர்களுடன் சேர்ந்து உலகளாவிய Binary Options தொடர்பான திட்டங்களில் 233 மில்லியன் டொலர்கள் மோசடி செய்ததாக கனடாவின் the Ontario Securities Commission குற்றம்சாட்டியது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா அவரை வலைவீசி தேடி வந்தது.
ரஷ்ய அதிகாரிகள்
இந்த நிலையில், St.Petersburgயின் Pulkovo சர்வதேச விமான நிலையத்தின் உள்துறை அமைச்சகத்தின் இன்டர்போல் பணியகத்தால், Josh Cartu திங்களன்று கைது செய்யப்பட்டு காவலில் எடுக்கப்பட்டதாக உள்ளூர் செய்தி இணையதளமான 47news.ru தெரிவித்துள்ளது.
மேலும், Cartu விசாரணையில் இருப்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளதாகவும், அவர் இரண்டு நாட்கள் காவலில் வைக்கப்படுவார் என்றும் The Outlet கூறியுள்ளது.
அத்துடன் அவர் மீதான குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், அவரை முறையாக கைது செய்ய ரஷ்ய அதிகாரிகள் நீதிமன்றத்தை நாடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் நாடு கடத்தல் ஒப்பந்தம் இல்லாத நிலையில், Cartuவை கைது செய்வதற்கான ஆவணங்களை 48 மணிநேரத்திற்குள் அனுப்பவில்லை என்றால், அவரை விடுவிக்க நேரிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், சமூக ஊடகங்களில் தனது ஆடம்பரமான வாழ்க்கை முறையைக் காட்டிக்கொள்ளும் Josh Cartu, ஒரு டசன் Ferrari கார்களை வைத்திருப்பதாகவும், பணக்கார சூப்பர் கார் உரிமையாளர்களுக்கான பந்தயங்கள் மற்றும் பேரணிகளில் பங்கேற்பதற்காகத் தொடர்ந்து பணம் செலுத்தியதாகவும் பத்திரிகை ஒன்று கூறியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |