உக்ரைனுக்கு ஆதரவாக பேசிய ரஷ்ய கோடீஸ்வரருக்கு பாய்சன் அட்டாக்! உரிந்த உடல் தோல்கள்... பரபர தகவல்
உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட குழு உறுப்பினர்களுக்கு விஷம் வைத்து பாய்சன் அட்டாக் நடத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி 24ஆம் திகதி தொடங்கிய உக்ரைன் போர், ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்கிறது. விளாடிமிர் புடினின் இந்தச் செயலை கண்டித்துள்ள உலக நாடுகள், ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகிறது.
தொழிலதிபர் ரோமன் அப்ரமோவிக்
இருந்த போதிலும், போர் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. ஒரு புறம் போர் சண்டை நடந்தாலும் மறுபக்கம் அமைதிப் பேச்சுவார்த்தையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில் பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்றுள்ள சிலரைக் குறி வைத்து பாய்சன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி உக்ரைன் அரசின் வேண்டுகோளை ஏற்று, ரஷ்யாவை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் ரோமன் அப்ரமோவிக் இந்த அமைதிப் பேச்சில் பங்கேற்று உக்ரைனுக்கு ஆதரவாக பேசி வந்தார்.
இந்நிலையில், தொழிலதிபர் ரோமன் மற்றும் உக்ரைன் அமைதி குழுவை சேர்ந்த இரண்டு பிரதிநிதிகளுக்கு கடந்த மாதம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அமெரிக்காவின், 'வால் ஸ்ட்ரீட் ஜெர்னல்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சமாதான பேச்சுக்களைச் சீர்குலைக்க
அதில், மூவருக்கும் கண்கள் சிவந்து, முகம் மற்றும் கைகளில் தோல் பகுதி உரிய துவங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவில் நடந்த பேச்சின் போது இவர்களுக்கு விஷம் வைக்கப்பட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.
தற்போது அவர்கள் உடல்நிலை தேறி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமாதான பேச்சுக்களைச் சீர்குலைக்க முயலும் சில ரஷ்ய நாட்டை சேர்ந்தவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த் தாக்குதலுக்குப் பின்னர் ரஷ்யாவைச் சேர்ந்த சிலர் இருக்க வாய்ப்புள்ளதாக புலனாய்வு அதிகாரி கிறிஸ்டோ குரோசெவ் தெரிவித்துள்ளார்.