ரஷ்ய சோதனை சாவடியை தாக்கிய மோட்டார் குண்டுகள்: ரஷ்ய கவர்னர் அறிவிப்பு!
உக்ரைனின் எல்லைக்கு அடுத்துள்ள குருபெட்ஸ் (Krupets) என்ற ரஷ்ய கிராமத்தின் சோதனை சாவடிகள் மீது ஷெல் தாக்குதல் நடத்தபட்டு இருப்பதாக அந்தப் பகுதியின் கவர்னர் ரோமன் ஸ்டாரோவாய்ட் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையே கடுமையான ராணுவ மோதல் 65 நாள்களை கடந்து தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில், தற்போது இந்த போரானது உக்ரைனின் கிழக்கு எல்லைப் பகுதியில் தீவிர கட்டத்தை அடைந்துள்ளது.
அந்தவகையில், கிழக்கு உக்ரைனின் எல்லைப் பகுதியை தாண்டியுள்ள குருபெட்ஸ் (Krupets) என்ற ரஷ்ய கிராமத்தின் சோதனை சாவடிகள் மீது மோட்டார் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக Kursk பகுதி கவர்னர் ரோமன் ஸ்டாரோவாய்ட் (Roman Starovoyt) தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தாக்குதலில் தீவிரமான பாதிப்புகளோ அல்லது உயிர்சேதங்களோ எதுவும் எற்படவில்லை எனவும் ஸ்டாரோவாய்ட் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: உலக அமைதிக்காக அணுஆயுதங்களை கைவிட்டோம்... ஆனால் எங்களுக்கான கதவுகள் திறக்கப்படவில்லை: குலேபா கருத்து!
குருபெட்ஸ் சோதனை சாவடி மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் போது ரஷ்ய எல்லை பாதுகாவலர்களும், ரஷ்ய ராணுவத்தினரும் இணைந்து பதில் தாக்குதல் நடத்தியதாகவும் ஸ்டாரோவாய்ட் தெரிவித்துள்ளார்.