உக்ரைனில் கொத்தாக 2000 பேர்களை பலிவாங்கிய ரஷ்ய தளபதி... சுத்தியலால் அடித்துக் கொலை
உக்ரேனிய வணிக வளாகம் மீது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலுக்கு காரணமான ரஷ்ய விமானப்படை தளபதி ஒருவர் சுத்தியலால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சுத்தியலால் நீதி வழங்கப்பட்டுள்ளது
ரஷ்யாவின் 52 வது கனரக குண்டுவீச்சு படைப்பிரிவின் மூத்த அதிகாரி கர்னல் டிமிட்ரி கோலென்கோவ் என்பவருக்கு சுத்தியலால் நீதி வழங்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் உள்ள சுபோனேவோ கிராமத்திற்கு வெளியே கோலென்கோவ்வின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2022 ஜூன் மாதம் 2022 பேரைக் கொன்ற வணிக வளாக குண்டு வீச்சுக்கு உத்தரவிட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மத்திய உக்ரைனில் அமைந்துள்ள Amstor mall தாக்குதலின் போது வாடிக்கையாளர்களால் நிரம்பியிருந்தது. இது மட்டுமின்றி, 2023 ஜனவரி மாதம் டினிப்ரோவில் 46 பேரைக் கொன்ற குண்டுவெடிப்புத் தாக்குதலில் கோலென்கோவ் குற்றம் சாட்டப்பட்டார்.
பயங்கரவாத செயல்களில் ஒன்று
டிமிட்ரி கோலென்கோவ் கொல்லப்பட்ட சம்பவத்தை உக்ரைன் உறுதி செய்துள்ளதுடன், அவரது தலை சுத்தியலால் சிதைக்கப்பட்டிருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளது.
கோலென்கோவ் ரஷ்ய விமானப் படையின் தலைமை அதிகாரி பதவியை வகித்தார். இதனால் தாக்குதல் தொடர்பாக திட்டமிடும் பணியிலும் அவர் ஈடுபட்டுள்ளார். உக்ரைன் பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கு காரணமானவர் என்றே உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.
Amstor mall தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் கருத்து தெரிவித்திருந்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, க்ரெமென்சுக்கில் உள்ள Amstor mall வணிக வளாகம் மீதான ரஷ்ய தாக்குதலானது ஐரோப்பிய வரலாற்றில் மிகவும் வெட்கக்கேடான பயங்கரவாத செயல்களில் ஒன்று என குறிப்பிட்டிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |