ரஷ்யாவின் திடீர் ட்ரோன் தாக்குதல்: இடிந்து விழுந்த 5 மாடி குடியிருப்பு கட்டிடம்: 14 பேர் மாயம்
Russian drone attack destroys Kyiv apartment: உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இடிந்து விழுந்த 5 மாடி குடியிருப்பு கட்டிடம்
உக்ரைன் தலைநகர் கீவ்வின் வடக்கே அமைந்துள்ள Dymer நகரில் இரவு நேரத்தில் ரஷ்யா நடத்திய திடீர் ட்ரோன் தாக்குதலில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் குறைந்தது 14 பேர் வரை காணாமல் போயிருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக X தளத்தில் ஜெலென்ஸ்கி வெளியிட்ட பதிவில், கீவ் நகரின் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கட்டிடம் இடிந்து விழுந்து இருப்பதாகவும், கட்டிடத்தின் இடிபாடுகளில் இன்னும் பலர் உயிருடன் சிக்கியிருக்கலாம் என்று மீட்புப் படையினர் அஞ்சுவதாக தெரிவித்துள்ளார்.

இடிபாடுகளில் இருந்து இதுவரை 9 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பதின்ம வயது சிறுவன் உட்பட குறைந்தது 2 பேர் காயமடைந்து இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இடிந்து விழுந்த கட்டிடத்தின் கழிவுகளை மீட்பு படையினர் வேகமாக அப்புறப்படுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.