கமெராமேன் உயிரை காப்பாற்ற தன் உயிரை விட்ட அமைச்சர்! எந்த நாட்டில் தெரியுமா? பரிதாப சம்பவம்
கமெராமேன் உயிரை காப்பாற்ற குன்றிலிருந்து குதித்ததில் பாறையில் மோதி பலத்த காயமடைந்த ரஷ்ய அமைச்சர் உயிரிழந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
55 வயதான ரஷ்யாவின் அவரசநிலைகளுக்கான அமைச்சர் Yevgeny Zinichev பரிதாபமாக இறந்துள்ளார். அவசரகால சூழ்நிலைகளுக்கான ரஷ்ய அமைச்சகம், அமைச்சர் Yevgeny Zinichev உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆர்க்டிக் மண்டலத்தை அவசரநிலைகளிலிருந்து பாதுகாப்பதற்கான பயிற்சியின் போது, ஒரு நபரின் உயிரைக் காப்பாற்ற முயன்ற போது Yevgeny Zinichev இறந்ததாக அவசரகால சூழ்நிலைகளுக்கான ரஷ்ய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட தகவலின் படி, அமைச்சர் Yevgeny Zinichev குன்றின் விளிம்பில் நின்றுக்கொண்டிருந்த போது, கமெராமேன் தவறி கீழே விழுந்துள்ளார் தண்ணீரில் விழுந்த கமெராமேனை காப்பாற்ற Zinichev உடனடியாக குன்றிலிருந்து கீழே குதித்துள்ளார்.
ஆனால் துரதிஷ்டவசமாக பாறையில் மோதி பலத்த காயமடைந்துள்ளார்.
சிகிச்சைக்காக ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இத்துயரமான சம்பவம் குறித்து ஜனாதிபதியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக ரஷ்ய அரசு செய்தித்தொடர்பாளர் Dmitry Peskov உறுதி செய்தார்.