உக்ரைனுக்காக உளவு பார்த்த ரஷ்ய நபர்! தேசத் துரோகத்திற்காக 16 ஆண்டுகள் சிறை
உக்ரைனுக்கு இராணுவத் தகவல்களை வழங்கிய குற்றத்திற்காக ரஷ்ய பொறியாளர் சிறையில் அடைக்கப்பட்டார்.
உக்ரைனுக்காக உளவு
ரஷ்யாவைச் சேர்ந்த Danil Mukhametov (32) என்ற நபர், Uralsயில் உள்ள Nizhny Tagil நகரில் செயல்படும் Uralvagonzavod என்ற இயந்திர தொழிற்சாலையில் பொறியாளராக பணியாற்றி வந்தார்.
இது உலகின் பாரிய டாங்கி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் ஒன்றாகும். இந்த நிலையில் Mukhametov உக்ரைனுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது இராணுவத் தகவல்களை உக்ரைனுக்கு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.
16 ஆண்டுகள் சிறை
இதன் மீதான விசாரணையில் Mukhametov தன் குற்றத்தை ஓரளவு ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு தேசத்துரோக குற்றத்திற்காக 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இதே குற்றச்சாட்டில் இவரது மனைவிக்கு கடந்த ஒக்டோபர் மாதம் 12.5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
பிப்ரவரி 2022யில் உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்பியதில் இருந்து ரஷ்யா திறந்திருக்கும் சமீபத்திய உக்ரைன் உளவு வழக்கு இதுவாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |