வயல்வெளியில் அவசரமாக தரையிறங்கிய ரஷ்யா விமானம்! அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய 167 பேர்
ரஷ்யாவின் விமானம் ஒன்று தொழில்நுப்டப கோளாறு காரணமாக சைபீரிய வயல்வெளியில் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரஷ்யா பயணிகள் விமானம்
கருங்கடல் ரிசார்ட் சோச்சியில் இருந்து, சைபீரியாவின் ஓம்ஸ்க் நகருக்கு 167 பேருடன் ரஷ்யா விமானம் பறந்தது.
குறித்த விமானம் நோவோசிபிர்ஸ்க் பகுதியில் உள்ள வனப்பகுதியில் செல்லும்போது திடீரென வயல்வெளியில் தரையிறங்கியுள்ளது.
AFP
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டாலும் 167 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மேலும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்குழு
ஊழியர்களின் கூற்றுப்படி, 159 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் விமானத்தில் பயணித்ததாக தெரிய வந்துள்ளது.
அத்துடன் பாரிய குற்றங்களை விசாரிக்கும் ரஷ்யாவின் விசாரணைக் குழு, விமானப் போக்குவரத்து பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றவியல் விசாரணையைத் திறந்துள்ளது.
AFP
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |