எரிவாயு நெருக்கடியால் திணரும் ஐரோப்பிய நாடுகள்: வலுவடையும் சீன ரஷ்ய உறவு!
கடந்த 5 மாதங்களில் மட்டும் சீனாவிற்கான ரஷ்ய எரிவாயு வழங்கல் 67% வரை அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகளை தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவும் ரஷ்யாவின் அத்துமீறல்கள் கண்டிக்கும் நோக்கில் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தனர்.
அதிலும் ரஷ்யாவின் வருவாய் பெருக்கத்தில் முக்கிய தூணாக விளங்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான பொருளாதார தடைகள் மேற்கத்திய நாடுகளால் பலமாக விதிக்கப்பட்டன.
#Russian gas supplies to #China increased in January-May 2022 by 67%.
— NEXTA (@nexta_tv) June 16, 2022
During the same time, global gas consumption decreased by 25 billion cubic meters, of which 24 billion was a decrease in gas consumption in #Europe. pic.twitter.com/c2l4ZFad4O
இதனால் ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயுகளை ஏற்றுமதி செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட ரஷ்யா, அதன் நட்பு நாடுகளான சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு குறைந்த விலையில் அதன் எண்ணெய் மற்றும் எரிப்பொருளை விற்க தொடங்கியது.
ரஷ்யா மீதான இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி தடைகள் ரஷ்யாவின் பொருளாதாரத்தை மட்டும் பாதிகாமல், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை பெருமளவு நம்பி இருந்த ஐரோப்பிய நாடுகளையும் இந்த தடைகள் பாதித்தன.
இந்தநிலையில், 2022ம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான சீனாவிற்கான ஏற்றுமதியில் ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிபொருள் வழங்கல் அளவானது 67% வரை உயர்ந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: குழந்தையின் இறப்பு குறித்து நிலவும் மர்மம்: விசாரணை 1வருடத்தை கடந்ததால் பொலிஸார் வருத்தம்!
மேலும் இதே கால அளவில் உலகின் மொத்த எரிபொருள் மற்றும் எண்ணெய் நுகர்வு 25 பில்லியன் cubic meters என்ற அளவிற்கும், ஐரோப்பிய நாடுகளில் மட்டும் 24 பில்லியன் cubic meters என்ற அளவிற்கும் குறைந்துள்ளது என தகவல் வெளிவந்துள்ளது.