ரஷ்ய உளவு கப்பலை சூறையாடிய உக்ரைன் ட்ரோன்கள்: தாக்குதல் வீடியோ
கருங்கடல் பகுதியில் இருந்த ரஷ்ய உளவு கப்பலை உக்ரைனிய கடல் ட்ரோன்கள் தாக்கும் காட்சிகள் சமூக ஊடகத்தில் வேகமாக பரவி வருகிறது.
தொடரும் தாக்குதல்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் 15 மாதங்களை கடந்தும் குறையாமல் அதே நிலையில் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இருநாட்டு ராணுவங்களும் போரின் ஆரம்ப மாதங்களில் கைப்பற்றிய இடங்களை தக்கவைத்து கொள்ளவும், இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றவும் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் ரஷ்ய ராணுவம் உக்ரைனின் மூலோபாய நகரான பக்முத்-ஐ முழுவதுமாக கைப்பற்றி விட்டதாக அறிவித்தது, ஆனால் அதனை முற்றிலுமாக மறுத்த உக்ரைனிய ராணுவம் எதிர்ப்பு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவித்தது.
ரஷ்ய உளவு கப்பல் மீது தாக்குதல்
இந்நிலையில் கருங்கடல் பகுதியில் சுற்றி திரிந்த இவான் குர்ஸ்(Ivan Khurs) என்ற ரஷ்ய உளவு கப்பல் ஒன்றை உக்ரைனின் கடல்வழி ட்ரோன்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் இவான் குர்ஸ் உளவு கப்பலுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் தெளிவாக கிடைக்கவில்லை.
The Russian reconnaissance ship Ivan Khurs was hit by a marine drone. Footage of the alleged attack on the ship was released online.
— NEXTA (@nexta_tv) May 25, 2023
Earlier, the Russian Defense Ministry said that the attack was repelled and all "enemy drones" were destroyed.
Russian warship, you know what to… https://t.co/TkgP4eAbko pic.twitter.com/gWARSYIpkv
இவான் குர்ஸ் கப்பல் மீது கடந்த 24ம் திகதி காலை நடத்தப்பட்ட இந்த அத்துமீறிய தாக்குதலில் மூன்று கடல் ட்ரோன்கள் வரை ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் தாக்குதல் குறித்து முன்னதாக தகவல் வெளியிட்டு இருந்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டு, எதிரிகளின் அனைத்து ட்ரோன்களும் அழிக்கப்பட்டது என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.