ரஷ்யா போர் விமானங்கள் அடுத்தடுத்து வெடித்து விழுந்த மர்மம்: வெளியான திகில் காட்சிகள்
ரஷ்யாவில் போர் விமானம் ஒன்றும் ஹெலிகாப்டரும் இரண்டு மணிநேர இடைவெளியில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்து விபத்துக்குள்ளான ரஷ்ய விமானங்கள்
சு-34 ஜெட் மற்றும் ஒரு எம்ஐ-8 ஹெலிகாப்டர் இரண்டு மணி நேரத்திற்குள் ரஷ்ய நகரத்தின் அருகே விபத்துக்குள்ளாகி எரிந்தபடி கீழே விழுந்தன.
முதலில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது, சிறிது நேரத்தில் சு-34 போர் விமானம் விபத்துக்குள்ளானது.
அதுமட்டுமின்றி மேலும் இரண்டு ரஷ்ய போர் விமானங்களும் விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் மர்மம் நீடிக்கிறது.
twitter@jcokechukwu
உக்ரைன் எல்லைக்கு அருகில்
முதல் இரண்டு விமானங்கள் விபத்துக்குள்ளான கிளிண்ட்ஸ்கி நகரம் உக்ரேனிய எல்லையிலிருந்து சுமார் 25 மைல் தொலைவில் உள்ள பிரையன்ஸ்க் தென்கிழக்கு பகுதியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு Mi-8 ஹெலிகாப்டரும், ஒரு Su-35 ஒற்றை இருக்கை போர் விமானமும் பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் மற்ற இடங்களில் கீழே விழுந்தன.
One of the worst days ever for the Russian Air Force: Today, at least 4 aircraft- an Su-34 strike jet, an Su-35 fighter and two Mi-8 helicopters, were shot down by anti-air missiles over Bryansk Oblast within Russia.
— ?? Ukraine Weapons Tracker (@UAWeapons) May 13, 2023
So far it is unclear what kind of missiles were used. pic.twitter.com/LjipZShRWC
Mi-8 ஹெலிகாப்டர் ஒன்று வானத்தில் இருந்து கீழே விழுந்த திகிலூட்டும் காட்சிகள் இணையத்தில் வெளியானது. பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து, Su-34 போர் விமானம் வானத்திலிருந்து விழுந்தது மற்றோரு வீடியோவாக வெளியானது. அதன் பாகங்கள் எரிந்தநிலையில் தரையில் இருக்கும் காட்சிகளும் வெளியானது.
❗️ Another Russian fighter jet was shot down today near Bryansk
— NEXTA (@nexta_tv) May 13, 2023
Russian media are reporting that four aircraft were shot down in the Bryansk region today.
According to their information, these were two Mi-8 helicopters and two fighters Su-34 and Su-35, which were returning from… pic.twitter.com/VB6106GQhv
அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட Mash மற்றும் Baza ஊடகங்கள், கீழே விழுந்த விமானங்களின் மொத்த எண்ணிக்கை நான்கு என்று கூறியது. இரண்டு Mi-8 ஹெலிகாப்டர்கள், Su-35 போர் விமானம் மற்றும் Su-34 போர் விமானம்- அவை அனைத்தும் போர்ப் பணியில் இருந்து திரும்பியவை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்கான காரணம்?
நட்புரீதியான துப்பாக்கிச்சூட்டில் ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலக்கு அடையாளம் காணும் அமைப்புகள் செயலிழந்ததால், நான்கு விமானங்களும் நட்புரீதியான தாக்குதலில் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என ரஷ்ய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
Two military helicopters and two fighter jets have been downed, resulting in the loss of all pilots. Russia has not seen such a devastating loss in modern history. https://t.co/sQuDTDU3M0 pic.twitter.com/tgsdkrbkY9
— Russian Market (@runews) May 13, 2023