பின்லாந்து வான்வெளியில் ரஷ்ய விமானம் - விசாரணை தொடக்கம்
Russian jet suspected in Finland airspace: பின்லாந்து வான்வெளியில் ரஷ்ய விமானம் நுழைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
பின்லாந்து பாதுகாப்பு அமைச்சகம், ரஷ்யாவின் ஒரு விமானம் பின்லாந்து வான்வெளியில் நுழைந்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்த சம்பவம் ஆகஸ்ட் 20, 2026 அன்று கிழக்கு பால்டிக் கடலின் போர்வோ அருகே நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆய்வு
அந்த ரஷ்ய விமானம் பின்லாந்து வான்வெளியில் சில நிமிடங்கள் பறந்ததாகவும், சில கிலோமீட்டர் தூரம் பின்லாந்து எல்லைக்குள் நுழைந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் அது சர்வதேச வான்வெளிக்குத் திரும்பியதாக கூறப்படுகிறது.
பின்லாந்து விமான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாக செயல்படுத்தப்பட்டு, அந்த விமானத்தின் பாதையை கண்காணித்தன. தற்போது ரேடார் மற்றும் பிற தரவுகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
பின்லாந்து பாதுகாப்பு அமைச்சர் அண்டி ஹக்கனென், “எந்தவொரு வான்வெளி மீறலையும் மிகுந்த முக்கியத்துவத்துடன் எடுத்துக்கொள்கிறோம். விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
ஒரு சம்பவம் அல்ல
இதுப்போன்ற சம்பவம் முதல்முறைய அல்ல. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களிலும் ரஷ்ய விமானங்கள் பின்லாந்து வான்வெளியில் நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது பின்லாந்து, ரஷ்ய தூதரக அதிகாரியை அழைத்து எதிர்ப்பு தெரிவித்தது.
பின்லாந்து, ரஷ்யாவுடன் 1,340 கிலோமீட்டர் நீளமான நில எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இது நேட்டோ (NATO) உறுப்பினரான பின்லாந்துக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மிக நீளமான எல்லையாகும். 2023 ஏப்ரல் மாதம் பின்லாந்து நேட்டோ கூட்டணியில் இணைந்ததிலிருந்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம், பால்டிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு சூழ்நிலையை மேலும் பதற்றமாக்கியுள்ளது. பின்லாந்து எல்லை பாதுகாப்பு படை, இந்த விமானம் திட்டமிட்டே நுழைந்ததா அல்லது வழிச் சிக்கலால் ஏற்பட்டதா என்பதை ஆராய்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |