வீட்டு வளர்ப்பு பூனையால் ஏற்பட்ட சோகம்: பறிப்போன 55 வயது மனிதரின் உயிர்!
ரஷ்யாவில் செல்லப் பூனை நகத்தால் கீறியதில் 55 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வளர்ப்பு பூனையால் பறிப்போன உயிர்
ரஷ்யாவை உலுக்கிய ஒரு சோக சம்பவத்தில், 55 வயதான டிமிட்ரி யுகின் தனது செல்லப் பூனை ஸ்டியோப்காவின் கீறலால் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்துள்ளார்.
நவம்பர் 22 அன்று நிகழ்ந்த இந்த சம்பவம், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
துயரமான இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன பூனையை கண்டுபிடித்து மிகவும் மகிழ்ச்சியடைந்த யுகின், எதிர்பாராத விதமாக தனது வளர்ப்பு பூனையால் தாக்கப்பட்டுள்ளார்.
நீரிழிவு நோய் உள்ளிட்ட பல உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்த யுகினின் உடலில் இரத்தம் உறைதல் குறைவாக இருந்ததால், பூனை ஏற்படுத்திய சிறிய காயம் பெரிய பிரச்சனையாக மாறியது.
இரத்தம் நிற்காமல் கொட்டியதை அடுத்து காயத்தின் தீவிரத்தை உணர்ந்த யுகின், மருத்துவ உதவியை அழைத்துள்ளார்.
ஆனால் துரதிஷ்டவசமாக மருத்துவ குழு வந்தடைவதற்குள் யுகின் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தின் போது மனைவி நடால்யா வீட்டில் இல்லை, ஆனால் ஸ்டியோப்கா ஒரு அமைதியான பூனை என்று பின்னர் தெரிவித்துள்ளார்.
தடயவியல் நிபுணர்கள், யுகினின் மரணத்திற்கான காரணங்களை இன்னும் முழுமையாக ஆராய்ந்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |