இரத்தம் கொட்டும் போரில் உத்திகளை மாற்றுங்கள்: புடினிடன் கெஞ்சும் ரஷ்ய கடற்படையினர்
இந்த போர் நடவடிக்கையில் சுமார் 75000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ரஷ்ய கடற்படையினர் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு கடிதம்.
இரத்தம் கொட்டும் உக்ரைன் போரில் இராணுவ மூலோபாயத்தை மாற்றியமைக்குமாறு ரஷ்ய கடற்படையினர் ஜனாதிபதி புடினுக்கு கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை பல மாதங்களாக நடந்து வரும் நிலையில், இந்த போர் நடவடிக்கை ஆண்டு கணக்கில் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை நடந்துள்ள இந்த போர் நடவடிக்கையில் சுமார் 75000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
AFP via Getty Images
இந்நிலையில் ரஷ்யாவுடன் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டுள்ள டொனெட்ஸ்க் மக்கள் குடியரசில் உள்ள ரஷ்ய கடற்படையினர் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய சார்பு பத்திரிகையாளர் அலெக்சாண்டர் ஸ்லாட்கோவ் இன்று டெலிகிராம் சேனலில் தகவல் ஒன்றினை தெரிவித்துள்ளார்,
அதில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட டொனெட்ஸ்க் மக்கள் குடியரசில் பாவ்லிவ்காவில் உள்ள ரஷ்ய கடற்படையினர் பெருகிவரும் இழப்புகள் குறித்து முறையீடு செய்துள்ளனர்.
AFP via Getty Images
மேலும் உக்ரைனில் உள்ள ரஷ்ய கடற்படையினரின் உத்திகளை மறுபரீசிலனை செய்யுமாறு கொஞ்க் கேட்டுக் கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: அணு ஆயுதம் எங்களுக்கு வேண்டாம்…முக்கிய நாடு வெளியிட்டுள்ள அறிவிப்பு
ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள ப்ரிமோர்ஸ்கி க்ராய் பிராந்தியத்தின் ஆளுநரான ஒலெக் கோசெமியாகோவுக்கு ரஷ்ய கடற்படையினர் இந்த கடிதம் எழுதியுள்ளனர்.
அதில் தங்களுக்கு சார்பாக செயல்படுமாறும், ஜனாதிபதி புடினின் உத்திகளை மாற்றிக்கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.