போரில் உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவு: 2 கிராமங்களை கைப்பற்றிய ரஷ்ய படைகள்
உக்ரைனில் இரண்டு புதிய கிராமங்களை ரஷ்யா தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போர்
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட 2 ஆண்டுகளை கடந்து விடாமல் நடைபெற்று வருகிறது.
இந்த போர் நடவடிக்கையில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
போர் தொடங்கியதில் இருந்து தடுப்பு தாக்குதல் நடத்தி வந்த உக்ரைன் சமீபத்தில் ரஷ்ய எல்லைகளை கடந்து பதிலடி தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
கைப்பற்றப்பட்ட உக்ரைனிய கிராமங்கள்
இந்நிலையில் உக்ரைனில் மேலும் 2 கிராமங்களை ரஷ்ய ஆயுதப்படைகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து இருப்பதாக அக்டோபர் 16ம் திகதி ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட உக்ரைனிய கிராமங்களில் ஒன்று போக்ரோவ்ஸ்க்(Pokrovsk) பகுதியில் இருந்து சில கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
போக்ரோவ்ஸ்கின் தென்கிழக்கு பகுதிக்கு 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கிராஸ்னி யார்(Krasnyi Yar) கிராமத்தையும் ரஷ்ய படைகள் கைப்பற்றி இருப்பதாக மாஸ்கோ தெரிவித்துள்ளது.
அத்துடன் தற்போது ரஷ்ய படைகள் போக்ரோவ்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள உக்ரைனிய ராணுவ தளவாட மையத்தை கைப்பற்ற திட்டமிட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
ரஷ்ய படைகளின் இந்த முன்னேற்றத்தின் போது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 350 ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |