வட கொரியா-தென் கொரியா போர் பதற்றம்: 1.4 மில்லியன் இளைஞர் ராணுவத்தில் சேர கையொப்பம்!
வட கொரியாவில் கிட்டத்தட்ட 10 லட்சம் இளைஞர் ராணுவத்தில் சேர கையெழுத்திட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் கொரியா-வட கொரியா இடையே அதிகரிக்கும் பதற்றம்
சமீபத்தில் தென் கொரியா அதன் ஆளில்லா விமானங்களை ஏவியதாகவும், தங்களின் எல்லை சாலைகளை சேதப்படுத்தியதாகவும் வட கொரியா குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவம் பதற்றம் அதிகரித்துள்ளது.
இது வடகொரியாவின் இறையாண்மையை அத்துமீறும் தீவிரமான ஆத்திரமூட்டும் செயல் என்று அரசு ஊடகமான KCNA இந்த சம்பவத்தை விவரித்து இருந்தது.
ராணுவத்தில் இணையும் மில்லியன் இளைஞர்கள்
இந்நிலையில் வட கொரிய ராணுவத்தில் புதிய சேர்க்கை மற்றும் மறு சேர்க்கைக்காக இந்த வாரம் மட்டும் மில்லியன் கணக்கான இளைஞர் ராணுவ சேர்க்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வட கொரிய அரசின் செய்தி நிறுவனமான KCNA, கிட்டத்தட்ட 1.4 மில்லியன் இளைஞர்கள் வட கொரிய ஆயுதப் படையில் சேர்வதற்கான மனுவில் கையெழுத்திட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
சர்வதேச மூலோபாய ஆய்வு கழகம் (IISS) இன் தரவுகளின்படி, வட கொரியாவில் தற்போது 12.8 லட்சம் தீவிர இராணுவ வீரர்களும், சுமார் 6 லட்சம் ரிசர்வ் வீரர்களும் உள்ளனர்.
கடந்த ஆண்டு அமெரிக்காவை எதிர்த்து போரிடுவதற்காக முன்வந்த 8 லட்சம் பேர்களை விட தற்போதைய ராணுவ சேர்க்கையானது அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |