ரஷ்ய ராணுவத்தின் துருப்புகளை சிதறடித்த உக்ரைன்: வீடியோ ஆதாரம்!
கிழக்கு உக்ரைனின் கார்கிவ் பகுதியில் அத்துமீறி நுழைய முயற்சி செய்த ரஷ்ய ராணுவத்தின் கனரக போர் வாகனங்களை உக்ரைன் அதிரடியாக சுட்டு விழ்த்தியுள்ளது.
ரஷ்யாவில் வரவிருக்கும் மே 9ம் திகதி வெற்றி விழா நாளுக்குள் ரஷ்ய ஆதரவாளர்கள் அதிகமாக இருக்கும் உக்ரைனின் கிழக்கு எல்லைப் பகுதியான டான்பாஸை முமுமையாக கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கில் ரஷ்ய ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதற்காக உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள உக்ரைனின் மேற்கு பகுதி நகரங்களில் இருந்த தனது அனைத்து ராணுவ படைகளையும் ரஷ்யா பின்னெடுத்து உள்ளது.
Russian military hardware struck by Ukrainian artillery fire reportedly in Izyum axis, Kharkiv Oblast.#Russia #Ukraine pic.twitter.com/l3kUZguzWi
— BlueSauron?️ (@Blue_Sauron) April 29, 2022
இந்த நிலையில் ரஷ்ய படைகளின் இந்த படை ஒருங்கிணைப்பு நடவடிக்கையை எதிர்த்து உக்ரைன் தடுப்பு ராணுவ படைகளும் தீவிரமாக சண்டையிட்டு தாக்குதல் நடத்திவருகின்றன.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்ய சோதனை சாவடியை தாக்கிய மோட்டார் குண்டுகள்: ரஷ்ய கவர்னர் அறிவிப்பு!
அந்தவகையில், உக்ரைனின் கிழக்கு எல்லைப் பகுதியான கார்கிவ்-வில் அத்துமீறி நுழைந்து இருந்த ரஷ்ய ராணுவத்தின் கனரக வன்பொருள் வாகனத்தை உக்ரைன் ராணுவம் தங்களது ஏவுகணைகள் முலம் தாக்கி அழித்துள்ளது.