ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: குழுவினர் மரணம்
ரஷ்யாவில் ராணுவ ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த அனைத்து இராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவின் Mi-28 ரக இராணுவ ஹெலிகாப்டர் (Mi 28 Military Helicopter) வியாழக்கிழமை காலை கலுகா பகுதியில் விபத்துக்குள்ளானதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
உக்ரைன் எல்லையில் இருந்து 150 கிலோமீட்டர் (93 மைல்) தொலைவில் உள்ள காட்டில் விழுந்து நொறுங்கியது.
“முதற்கட்ட தகவல்களின்படி, விபத்துக்கான காரணம் தொழில்நுட்ப கோளாறு” என்று பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |