16 வயது மகனை கடத்திவிட்டனர்...தயவுசெய்து உதவுங்கள்: உக்ரைன் மாநில தலைவர் கதறல்!
உக்ரைனின் Zaporizhzhya பிராந்திய மாநில நிர்வாகத்தின் தலைவர் ஓலெக் புரியக்கின் மகன் விளாடிஸ்லாவ்-வை(16) ரஷ்ய படைகள் கடத்திவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
உக்ரைனில் தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய படைகள் அந்த நாட்டின் நிர்வாகத்தை சீர்குலைக்கும் வகையில் அவற்றின் முக்கிய நகரங்களின் மேயர்கள் மற்றும் மாநில நிர்வாக தலைவர்களை கடத்திவந்தது.
இந்தநிலையில், உக்ரைன் தென்கிழக்கு Zaporizhzhya பகுதியின் மாநில நிர்வாக தலைவர் ஓலெக் புரியக்கின் மகன் விளாடிஸ்லாவ்-வை(16) ரஷ்ய படைகள் கடத்திவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
?"My son was kidnapped. #Russians kidnapped him. He is only 16 years old. I don't know where my son is now. I appeal to #European community, to all humanity - help me. Let the whole world know that Russians are kidnapping children here in the country," said Oleg Buryak.
— NEXTA (@nexta_tv) April 17, 2022
இதுகுறித்து ஓலெக் புரியக்கின்வெளியிட்டுள்ள தகவலில், "எனது மகன் கடத்தப்பட்டு விட்டான், ரஷ்யர்கள் அவனை கடத்திவிட்டனர், அவனுக்கு வெறும் 16 வயது தான் ஆகிறது, தற்போது அவன் எங்கு இருக்கிறான் என்று கூட தெரியவில்லை" என தெரிவித்துள்ளார்.
மேலும் "இது தொடர்பாக தான் ஐரோப்பிய யூனியன் மற்றும் அனைத்து மனிதர்களையும் கேட்டுக்கொள்கிறேன் எனக்கு எனக்கு உதவுங்கள், மற்றும் உலகம் அனைத்திற்கும் தெரியட்டும் ரஷ்யர்கள் உக்ரைனில் உள்ள குழந்தைகளையும் கடத்துகிறார்கள் என்று என தெரிவித்துள்ளார்.
மரியுபோல் தான் ரஷ்யாவிற்கான சிவப்பு கோடு: டிமிட்ரோ குலேபா எச்சரிக்கை!
இதனை அந்தப்பிராந்தியத்தின் மாநில ராணுவ துணை தலைவர் ஸ்லாடா நெக்ராசோவாவும் ( Zlata Nekrasova) உறுதிப்படுத்தியுள்ளார்.