பயங்கரமான நாயிடமிருந்து தன் குழந்தையைக் காப்பாற்ற தனது உடலை கேடகமாக பயன்படுத்திய தாய்
ரஷ்யாவில், ஆக்ரோஷமாக சீறியபடி வந்த ஒரு நாயிடமிருந்து தன் குழந்தையை காப்பாற்றுவதற்காக, தனது உடலையே கேடகமாக பயன்படுத்தியுள்ளார் ஒரு பெண்.
குழந்தையை காப்பாற்றுவதற்காக தாய் செய்த செயல்
ரஷ்யாவிலுள்ள, யேகட்டரின்பர்க் (Yekaterinburg) என்னுமிடத்தில் குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Rottweiler வகை நாயொன்று தன் குழந்தையைத் தாக்குவதிலிருந்து குழந்தையைக் காப்பாற்றுவதற்காக பெண்ணொருவர் தன் உடலையே கேடகமாக பயன்படுத்தி நாயால் தாக்கப்படும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன.
அந்தப் பெண், தனக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையிலும், தன் குழந்தையை நாய் கடிக்காமல் காப்பாற்றுவதிலேயே குறியாக இருப்பதைக் காட்டும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
அவருக்கு பலத்த காயமும், எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ள நிலையில், அந்தக் குழந்தைக்கோ எவ்வித காயமும் ஏற்படவிடவில்லையாம் அந்தத் தாய்.
அதிகாரிகள் இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ள நிலையில், அவரை ஹீரோ என புகழ்ந்துள்ள இணையவாசிகள், அதே நேரத்தில் இப்படிப்பட்ட பெரிய, பயங்கரமான நாய்களை கட்டவிழ்த்துவிட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |