நாட்டின் ஜனாதிபதி புடினையே முதுகில் குத்திய ரஷ்யா! உக்ரைன் போரில் திருப்புமுனை உறுதி... முக்கிய தகவல்
விளாடிமிர் புடினை ரஷ்ய அதிகாரிகளே கவிழ்க்க சதி செய்கிறார்கள் என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி ரஷ்ய ஜனாதிபதி புடினை வீழ்த்த சதி நடப்பதாகவும், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் உக்ரைன் மீதான போரில் முக்கியமான திருப்புமுனை ஏற்படும் எனவும் உக்ரைன் நாட்டின் ராணுவ மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் கூறியுள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் தொடர்ந்து நடக்கும் நிலையில் ஒருபுறம் புடின் புற்றுநோயா பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் மறுபுறம் அவரின் ரகசிய காதலி கர்ப்பமாக உள்ளதாகவும் செய்திகள் தொடர்ந்து உலா வருகின்றன.
ரஷ்யாவின் அடி மடியிலேயே கைவைத்த உக்ரைன்! சக்தி வாய்ந்த ராக்கெட் லாஞ்சரை தட்டிதூக்கிய வீடியோ
இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கொல்ல சதி நடப்பதாகவும், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் உக்ரைன் மீதான போரில் முக்கியமான திருப்புமுனை ஏற்படும் எனவும் உக்ரைன் நாட்டின் ராணுவ மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் கூறியுள்ளது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் கூறுகையில், உக்ரைனில் நடக்கும் போரில் ரஷ்யா தோல்வியுற்றால், புடின் அகற்றப்படுவார் மற்றும் அவரது நாடு வீழ்ச்சியடையும்.
புடினை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது என்ற அவரிடம் ஏற்கனவே ஆட்சிக்கவிழ்ப்பு நடந்ததாக நம்புகிறீர்களா என்று கேட்ட போது, ஆம் என்று பதிலளித்ததோடு, புடினை வீழ்த்துவதை தடுக்க இயலாது என்று கூறியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.