உக்ரைனுக்காக நாசவேலை செய்ய திட்டமிட்ட 4 பெண்கள்: ரஷ்யாவில் அதிரடி கைது
ரஷ்யாவில் நாசவேலை தாக்குதல்களுக்கு திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
4 பெண்கள் கைது
ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவை (FSB) அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அன்று 4 பெண்களை கைது செய்தனர்.
அப்பெண்கள் உக்ரேனிய பாதுகாப்பு சேவைகளுக்கான முகவர்களாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் எரிசக்தி தளங்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் மீது தாக்குதல்களைத் திட்டமிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக FSB அதிகாரிகள் கூறுகையில், "ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் எரிசக்தி தளங்களுக்கு எதிராக நாசவேலை மற்றும் பயங்கரவாத செயல்களை செய்வதற்காக, நான்கு பேரும் உக்ரேனிய பிரதேசத்தில் துப்பாக்கிகள், கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்துவதிலும், ட்ரோன் வழிகாட்டுதலிலும் பயிற்சி பெற்றனர்" என தெரிவித்துள்ளனர்.
ஏராளமான வெடிபொருட்கள்
அதேபோல் ரஷ்ய சட்ட அமலாக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, பெண்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஏராளமான வெடிபொருட்கள், குண்டுகள் தயாரிப்பதற்கான பொருட்கள் மற்றும் அவர்களின் உக்ரேனிய கையாளுபவர்களுடன் தொடர்பு கொள்ளும் வழிமுறைகள் கிடைத்தன.
அத்துடன் குறித்த பெண்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாகவும், அவர்களுக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் FSB தெரிவித்தது.
இதற்கிடையில், கிரிமியாவின் துறைமுக நகரமான செவாஸ்டோபோவிலும், தெற்கு ரஷ்யாவின் வோரோனேஜ் மற்றும் ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரங்களிலும் பெண்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |