80 வான் பாதுகாப்புப் பிரிவுகளுடன்..54 குழுக்களை சேர்க்க ரஷ்யா திட்டம்
ரஷ்யாவில் புதிய வான் பாதுகாப்புப் பிரிவுகளில் சேருமாறு, முன்னாள் இராணுவ வீரர்களை லெனின்கிராட் பிராந்தியம் கேட்டுக்கொள்கிறது.
இராணுவ இருப்புப் படையினர்
உக்ரைனின் ட்ரோன்கள் ரஷ்யாவில் எண்ணெய் ஏற்றுமதி முனையங்களைத் தாக்கியதைத் தொடர்ந்து, லெனின்கிராட் பிராந்திய அதிகாரிகள் புதிய திட்டமொன்றை அறிவித்தனர்.
அதாவது, வான் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக இராணுவ இருப்புப் படையினரைச் சேர்க்கும் திட்டத்தை கூறியுள்ளனர்.
முன்னாள் இராணுவ வீரர்களை புதிய வான் பாதுகாப்புப் பிரிவுகளில் சேருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மூன்றாண்டு ஒப்பந்தங்களில்
ஆளுநர் அலெக்ஸாண்டர் ட்ரோஸ்டென்கோ கூறுகையில், வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக புதிய நடமாடும் தாக்குதல் குழுக்கள் முக்கிய இடங்களில் நிலைநிறுத்தப்படும் என்று கூறினார்.

மேலும் அவர், உக்ரைன் போரில் பங்கேற்ற முன்னாள் இராணுவ வீரர்கள், முன்னாள் சோவியத் மற்றும் ரஷ்ய வீரர்கள், இந்தப் பிரிவுகளில் பணியாற்றுவதற்காக மூன்றாண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுமாறும் கேட்டுக் கொண்டார்.
சூன் 1ஆம் திகதிக்குள், தற்போதுள்ள 80 வான் பாதுகாப்புப் பிரிவுகளுடன் மேலும் 54 குழுக்களைச் சேர்க்க இப்பிராந்தியம் திட்டமிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |