உக்ரைன் வீரர்கள் போல வேடமணிந்து உள்ளே புகுந்த ரஷ்ய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்! வெளியான அறிவிப்பு
உக்ரைன் ராணுவ வீரர்களை போல வேடமணிந்து தலைநகரில் புகுந்த ரஷ்ய படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை உக்ரன் ராணுவம் வெளியிட்டுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தாக்குதல் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
இதில் ரஷ்யாவை சேர்ந்த 800 வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு அறிவித்தது. அதே போல உக்ரைனின் 70க்கும் மேற்பட்ட ராணுவ தளங்களை முற்றிலும் அழித்து விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இதனிடையில் உக்ரைனின் இரண்டு ராணுவ வாகனங்களை கைப்பற்றிய ரஷ்ய ராணுவ வீரர்கள், உக்ரேனிய இராணுவ சீருடையில் தலைநகர் kyiv-ஐ நோக்கி வேகமாக முன்னேறி வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் உக்ரேனிய ராணுவ வீரர்களை போல வேடமிட்டு அவர்கள் சீருடையில் சென்ற வீரர்கள் தலைநகர் kyivல் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.