தோல்வியைத் தழுவிய ரஷ்ய விண்வெளித் திட்டம்: முக்கிய அறிவியலாளர் மருத்துவமனையில்...
ரஷ்ய விண்வெளித் திட்டம் ஒன்று தோல்வியைத் தழுவிய நிலையில், அதன் பின்னணியில் முக்கிய ஆலோசகராக செயல்பட்ட அறிவியலாளர் அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தோல்வியைத் தழுவிய ரஷ்ய விண்வெளித்திட்டம்
நிலவில் விண்கலம் ஒன்றை தரையிறக்கும் ரஷ்யாவின் திட்டமான The Luna 25 திட்டம் தோல்வியைத் தழுவியது. உடனடியாக, ரஷ்யாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தியவர்கள் தண்டிக்கப்படலாம் என்ற பரபரப்பு உருவானது.
எதிர்பார்த்தது போலவே, அந்த விண்வெளித்திட்டத்தின் முக்கிய ஆலோசகராக விலங்கிய Mikhail Marov (90) என்னும் அறிவியலாளர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
Image: YouTube/@Kosmonavtika
திடீர் உடல் நலக்குறைவுக்குக் காரணம்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள Mikhail, அந்த விண்வெளிக்கலத்தில் அனுப்பப்பட்ட கருவியைத் தரையிறக்க முடியாமல் போய்விட்டது என்றும், ஏதோ தவறு நேர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளதுடன், எதையும் மூடி மறைக்கவேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், எதிர்காலத்தில் அந்த பிரச்சினைக்கான தீர்வு காணப்படும் என்றும் கூறியுள்ளார் அவர்.
மேலும், அந்த விண்கலம் தரையிறக்கப்படும் திட்டம் தோல்வியடைந்ததாலேயே தான் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள அவர், தனது உடல் நலம் பாதிக்கப்பட்டதற்கு அதுதான் காரணம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.
Image: AP
அந்த விண்வெளித்திட்டம் தன் வாழ்வின் ஒரு முக்கிய விடயம் என்று கூறியுள்ள Mikhail, அது தோல்வியடைந்துள்ளதால் எப்படி தன்னால் கவலைப்படாமல் இருக்கமுடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆக, தனது உடல் நலம் பாதிக்கப்பட்டதன் பின்னணியில் புடின் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் Mikhail.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |