மீட்பு பணியின் போது ரஷ்ய நடத்திய ஷெல் தாக்குதல்: பரிதவிக்கும் உக்ரைனின் மக்களின் வீடியோ காட்சி
உக்ரைனின் கார்க்கிவ் நகரிலிருந்து பொதுமக்களை மீட்டு வெளியேற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில் ரஷ்ய ராணுவத்தினர் நடத்திய ஷெல் தாக்குதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உக்ரைனின் ரஷ்ய படையெடுப்பானது 20வது நாளை கடந்து தாக்குதல் தீவரமடைந்து இருக்கும் நிலையில், உக்ரைனின் பெரும்பாலான நகரங்களை ரஷ்ய ராணுவம் சுற்றிவளைத்து ஏவுகணை தாக்குதல் மழையை நடத்திவருகிறது.
ரஷ்யாவின் இந்த தீவரமான தாக்குதலில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக பெரும்பாலான பொதுமக்கள் போர் தொடங்கிய சில நாள்களுக்குள்ளாகவே வெளியேறிய நிலையில், மீதமுள்ள பொதுமக்களையும் தாக்குதல் அதிகரித்த இடங்களில் இருந்து உக்ரைன் அரசு அவசர அவசரமாக வெளியேற்றி வருகிறது.
❗️In #Kharkiv, #Russian troops began shelling the city right at the time of the evacuation of people pic.twitter.com/Xg280BaGnH
— NEXTA (@nexta_tv) March 15, 2022
அந்தவகையில் இன்று உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்க்கிவ் நகரில் இருந்து பொதுமக்களை மீட்பு குழுவினர் வெளியேற்றிக்கொண்டு இருக்கும் நேரத்தில் அப்பகுதியில் ரஷ்ய ராணுவத்தினர் ஷெல் தாக்குதலை நடத்தையுள்ளனர்.
இதனால் பொதுமக்கள் வெளியேற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு அனைவரும் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா மீது குவியும் அழுத்தம்: நான்காம் கட்ட தடைகளுக்கு ஐரோப்பிய யூனியன் அனுமதி