பேப்பர் வெட்டும் கத்தியால் உக்ரைன் வீரருக்கு ஆண்மை நீக்கம் செய்த ரஷ்யப் படையினர்: ஒரு அதிர்ச்சி வீடியோ
உக்ரைன் வீரர் ஒருவரின் ஆணுறுப்பை பேப்பர் வெட்டும் கத்தியைக் கொண்டு ரஷ்யப் படையினர் வெட்டும் அதிபயங்கர வீடியோ ஒன்று வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ரஷ்யப் படைவீரர்களின் உடை அணிந்த ஒருவர், உக்ரைன் வீரர் ஒருவரின் ஆணுறுப்பை வெட்டி, அதை கமெராவுக்கு முன் காட்டுகிறார்.
இந்த பயங்கர சம்பவம், டான்பாஸ் பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது.
செய்திகளின் உண்மை நிலை அறியும் அமைப்பு ஒன்று அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை உறுதி செய்துள்ளது.
file image, Russian soldiers in occupied Donbas
அந்த உக்ரைன் வீரரின் நிலை என்ன என்று தெரியாத நிலையில், உடனடி சிகிச்சையளிக்கப்படாத நிலையில், அவர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
இந்த வீடியோ உக்ரைனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து போர்க்குற்றங்களில் ஈடுபட்டும் தாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என ரஷ்யா கூறிவரும் நிலையில், ரஷ்யா இந்த குற்றத்திற்கு உரிய தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும் என்று கூறியுள்ளார் இந்த வீடியோவை ட்வீட் செய்த உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினரான Inna Sovsun.