உக்ரைனிடம் சிக்கிய ரஷ்ய வீரர்களின் பரிதாப கதி: பரபரப்பு வீடியோ காட்சி!
உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திவந்த ரஷ்ய ராணுவ வீரர்களை பிணை கைதிகளாக அந்த நாட்டு ராணுவம் சிறைபிடித்து அழைத்து செல்லும் வீடியோ ஆதாரங்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் முக்கிய நகரங்கள் சிலவற்றை ரஷ்யா தாக்குதல் நடத்தி முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது தலைநகர் கீவ்வை சுற்றிவளைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்ய ராணுவத்துடன் எண்ணிக்கையில் ஒப்பிடுகையில் உக்ரைன் ராணுவம் மிக குறைந்த பலமே கொண்டிருந்தாலும் ரஷ்யாவின் தாக்குதலை தடுத்து எதிர் தாக்குதலையும் உக்ரைன் வெற்றிகரமாக நடத்திவருகிறது.
В Снигиревке Николаевской области, взяли в плен группу русских солдат. pic.twitter.com/KKowigW9O0
— ⚡️Спутник News АТО ?? (@SputnikATO) March 8, 2022
உக்ரைனின் இந்த எதிர்தாக்குதலில் இதுவரை நூற்றுக்கணக்கான வீரர்கள், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் டாங்கிகள் என பலவற்றை ரஷ்யா இழந்துள்ளது.
அந்தவகையில், தற்போது உக்ரைனின் ஸ்னிகிரேவ்காவில் உள்ள நிகோலேவ் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட ராணுவ வீரர்களின் குழு ஒன்றையும் பிணைக்கைதிகளாக ரஷ்யா தற்போது இழந்துள்ளது.
மேலும் அது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் உக்ரைன் ராணுவம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் ரஷ்ய ராணுவ வீரர்களை உக்ரைன் ராணுவ வீரர்கள் பிணைக்கைதிகளாக சிறைபிடித்து அழைத்து செல்வது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரல் ஆகிவருகிறது.