உக்ரைன் நடத்திய துல்லிய தாக்குதல்: நீரில் மூழ்கிய ரஷ்யாவின் முக்கிய ஆயுதம்
ரஷ்யாவின் நீர்மூழ்கி கப்பலை அழித்து இருப்பதாக உக்ரைனிய ராணுவம் அறிவித்துள்ளது.
ரஷ்ய நீர்மூழ்கி கப்பல் அழிப்பு
கிரிமியன் தீபகற்பத்தில் உள்ள துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரஷ்ய நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழித்து இருப்பதாக உக்ரைனிய ராணுவம் அறிவித்துள்ளது.
உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், சனிக்கிழமை Sevastopol துறைமுக நகரில் ரஷ்யாவின் நீர்மூழ்கி கப்பலானது ஏவுகணையால் தாக்கப்பட்ட பிறகு நீரில் மூழ்கியதாக தெரிவித்துள்ளது.
மேலும், தீபகற்பத்தை பாதுகாப்பில் வைத்து இருந்த நான்கு S-400 வான் தடுப்பு சாதனங்களையும் தாக்குதலில் அழித்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா பதிலளிக்கவில்லை
ரோஸ்டோவ்-ஆன்-டான்(Rostov-on-Don) என்ற kilo-class தாக்குதல் வகை நீர்மூழ்கி கப்பலானது 2014ம் ஆண்டு ஏவப்பட்டது.
அத்துடன் ரஷ்யாவின் கருங்கடல் பகுதியில் கலிபர் கப்பல் ஏவுகணைகளை ஏவக்கூடிய நான்கு நீர்மூழ்கி கப்பல்களில் இதுவும் ஒன்றாகும்.
PROOF ?? winning Battle for Black SEA
— UncleSamsNaughtyFella (@JustAJaneJ) August 3, 2024
Satelite imagery seems to confirm ?? submarine Rostov-on-Don in Sevastopol - was sunk.
⚓️Impact: each lost ship & submarine costs a MINIMUM of 10 years to replace (designing, building, sea trials, replacing personnel & training)
Good job ?? pic.twitter.com/F29BAqGduQ
உக்ரைனின் இந்த அறிவிப்புகளுக்கு ரஷ்யா இதுவரை எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |