ரஷ்யாவின் சிறந்த போர் டாங்கியை அழித்த உக்ரைன் ராணுவம்! வெளியான வீடியோ
ரஷ்யாவின் சக்தி வாய்ந்த T-72B3 போர் டாங்கியை உக்ரைன் முழுவதுமாக அழித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 133-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இதனால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் கார்கிவ் ஒபாஸ்டில் உக்ரைன் ரஷ்யாவின் அடிமடியிலேயே கைவைக்கும் அளவுக்கு ஒரு முக்கிய தாக்குதலை நடத்தியுள்ளது.
??⚡Kharkiv Oblast, a turretless Russian T-72B3 burns ????#StandWithUkraine️ #StopPutin #UkraineRussiaWar pic.twitter.com/A0vmTAVGNH
— Eng yanyong (@EngYanyong) July 2, 2022
அதன்படி ரஷ்யாவின் T-72B3 ரக போர் டாங்கியை தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.
T-72 என்பது சோவியத் / ரஷ்ய முக்கிய போர் டாங்கிகளின் குடும்பமாகும், இது 1969 இல் உற்பத்தியில் நுழைந்தது. உலகில் உள்ள போர் டாங்கிகளில் மிக சிறந்தவைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.