ரஷ்யாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த உக்ரைன் ராணுவம்! மரண அடியின் ஆதார வீடியோ
உக்ரைனின் ராணுவம் ரஷ்யாவின் முக்கிய உபகரணங்களை மொத்தமாக அழித்துள்ளது.
அதன்படி தெற்கில் உள்ள ரஷிய உபகரணங்கள், வெடிமருந்து கிடங்குகளை அழித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவின் T-62 டேங்க், உராகன் மல்டிபிள் ராக்கெட் லாஞ்சர், ஹோவிட்சர் "Msta-B", 8 இராணுவ வாகனங்கள் மற்றும் 2 வெடிமருந்து கிடங்குகளை அழித்ததாக உக்ரைனின் தெற்கு செயல்பாட்டுக் கட்டளை தெரிவித்துள்ளது.
உக்ரைனின் இந்த தாக்குதலில் ரஷ்யாவும் ஒரே நேரத்தில் 30 வீரர்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
First ancient Russian T-62 tank (1960-1970) destroyed in Ukraine. Russia running out of modern equipment. pic.twitter.com/w11HxTGnNz
— Ostap Vyshnya (@VyshnyaOstap) July 3, 2022
உக்ரைன் அழித்த ரஷ்யாவின் T-62 டேங்க் மிகவும் பழமை வாய்ந்ததாகும். உக்ரைனின் தொடர் பதிலடி தாக்குதல் காரணமாக ரஷ்யாவின் நவீன உபகரணங்கள் தீர்ந்து போகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி தொடங்கி நான்கு மாதங்களை கடந்து தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.