தலைநகரை நெருங்கிய ரஷ்ய படையினரை துவம்சம் செய்த உக்ரைன் இராணுவம்: தலை தெறிக்க தப்பியோடிய ரஷ்ய வீரர்கள்
உக்ரைன் தலைநகரைக் கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சியில் மீண்டும் ஒரு பின்னடைவு ஏற்பட்டது.
உக்ரைன் தலைநகரான Kyivஐக் கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. அதற்காக, நேற்று இரவு, சுமார் 30 டாங்குகளுடன் ரஷ்ய வீரர்கள் Kyivஐ நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், அவர்கள் எதிர்பாராதவிதமாக, திடீரென உக்ரைன் வீரர்கள் அவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினார்கள். கனரக ஆயுதங்கள் மூலம் முன்னும் பின்னும் தாக்குதல் நடந்த, மிரண்டுபோன ரஷ்ய வீரர்களில் உயிர் தப்பியவர்கள் தலை தெறிக்க ஓட்டம் பிடித்துள்ளார்கள்.
சுமார் 30 டாங்குகளுடன் வந்தும், உக்ரைன் வீரர்களின் திடீர் தாக்குதலை சமாளிக்க ரஷ்ய வீரர்களால் முடியவில்லை. அத்துடன், ரஷ்யாவின் மூத்த தளபதி ஒருவரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நினைத்தபடி உக்ரைனைக் கைப்பற்ற முடியவில்லை என்பதால் தன் தளபதிகள் மீது புடின் கடுங்கோபத்தில் இருக்கும் நிலையில், இந்த சம்பவம் புடினுக்கு மீண்டும் ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.
கொல்லப்பட்ட ரஷ்ய தளபதியின் பெயர் கர்னல் Andrei Zakharov என்று கூறப்படுகிறது. 2016ஆம் ஆண்டு ரஷ்யாவின் உயரிய விருது ஒன்றைப் பெற்ற Zakharov, புடினுடன் தோளோடு தோள் சேர்த்து நின்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய டாங்குகளை உக்ரைன் துவம்சம் செய்வதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ள நிலையில், அதில், தளபதி கொல்லப்பட்டுவிட்டார் என ரஷ்ய வீரர் ஒருவர் சத்தமிடுவதும் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இரண்டு முக்கிய தளபதிகளை புடின் இழந்துவிட்ட நிலையில், தற்போது அவருக்கு மீண்டும் ஒரு பெரிய இழப்பு நேரிட்டுள்ளது.