உக்ரைனில் 2 புதிய கிராமங்களை கைப்பற்றிய ரஷ்யா: வேகமாக முன்னேறும் துருப்புகள்
ரஷ்யா இரண்டு புதிய கிராமங்களை உக்ரைனில் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விரைவாக முன்னேறும் ரஷ்ய துருப்புகள்
உக்ரைனுக்கு எதிரான போரில் தீவிரமாக செயல்பட்டு வரும் ரஷ்யா அடுத்தடுத்து பல பகுதிகளை கைப்பற்றி வருகிறது.
குறிப்பாக, பல வாரங்களாக கிழக்கு டொனென்ட்ஸ்க் பகுதியில் டசின் கணக்கான நகரங்களையும், கிராமங்களையும் ரஷ்யா கைப்பற்றி விரைவான முன்னேற்றங்களை செய்து வருகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமையன்று மேலும் இரண்டு புதிய கிராமங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
478 சதுர கிலோமீற்றர்
தொழில்துறை நகரமான குராகோவுக்கு அருகில் உள்ள குராக்கிவ்கா என்ற பாரிய கிராமத்தை கைப்பற்றுவதை ரஷ்யா நோக்கமாக கொண்டுள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது.
அதேபோல் கிழக்கு லுஹான்ஸ்க் பகுதிக்கு அருகில் உள்ள கார்கிவ் பகுதியில் உள்ள Pershotravneve என்ற சிறிய கிராமத்தையும் அது உரிமை கோரியது.
அக்டோபர் மாதத்தில் 478 சதுர கிலோமீற்றர் உக்ரேனிய நிலப்பரப்பை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |