ஆப்பிரிக்கரின் உடலில் கண்ணிவெடி: மனித வெடிகுண்டாக மாற்ற..ரஷ்யப் படையின் அதிர்ச்சி செயல்
ரஷ்யப் படைகள் போரில் ஆப்பிரிக்கரை இனவெறியுடன் நடத்தியதாக அதிர்ச்சியூட்டும் காணொளிகள் பரவி வருகின்றன.
பீரங்கித் தீனி
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் காயமடைந்தனர் மற்றும் காணாமல் போயினர்.
Image: EPA-EFE/Vitalii Nosach
அதே சமயம் பலர் போரில் பீரங்கித் தீனியாகப் பயன்படுத்தப்படுவதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா (Andrii Sybiha) குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், சமூக ஊடகங்களில் ரஷ்யப் படைகள் குறித்து அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அவற்றில் ரஷ்யப் படைகள் இனவெறிப் பேச்சுக்களைப் பயன்படுத்துவது, ஆப்பிரிக்கர்களின் மரணங்களைப் பற்றி கேலி செய்வது போன்றவை உள்ளன.
Image: X/Reuters
தன்னைத்தானே வெடிக்கச் செய்யும்படி
அதிலும் குறிப்பாக, சீருடையில் உள்ள ஆப்பிரிக்கர் ஒருவரை உக்ரேனிய பதுங்கு குழியை அழிக்க தன்னைத்தானே வெடிக்கச் செய்யும்படி கட்டாயப்படுத்துவது போன்ற காட்சிகள் கொண்ட அதிர்ச்சியூட்டும் காணொளிகளும் வெளியாகியுள்ளன.
அதாவது, ரஷ்ய சிப்பாய் ஒருவர் ஆப்பிரிக்கரைப் போன்ற நபரின் உடலில் கண்ணிவெடியைக் கட்டி, அவரை மனித வெடிகுண்டாக செயல்பட கட்டாயப்படுத்துவது போல் காணொளியில் தெரிகிறது.
அத்துடன் அவர் ஒரு இனவெறிச் சொல்லையும் பயன்படுத்தி வசைபாடுகிறார். மேலும் எதிரியின் பதுங்கு குழியை 'திறப்பதற்காக' அவன் தன்னைத்தானே வெடிக்கச் செய்யப் போகிறான் என்றும் கூறுகிறார்.
Image: EPA
Image: AP
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |