மருந்து விநியோகத்தை தடுக்கும் ரஷ்யா: மனிதகுலத்திற்கு எதிரான செயல்: உக்ரைன் அமைச்சர் கண்டனம்
- ரஷ்யா மருந்து விநியோகத்தை தடுக்கிறது என உக்ரைன் குற்றச்சாட்டு
- மருத்துவ உள்கட்டமைப்புகளின் அழிவு மற்ற சிகிச்சைகளிலும் தலையிட்டுள்ளது என அமைச்சர் கருத்து
ரஷ்ய படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் மலிவு விலையில் மருந்துகள் வழங்கப்படுவதைத் தடுப்பதன் மூலம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்தை ரஷ்யா செய்வதாக உக்ரைனின் சுகாதாரத் துறை அமைச்சர் விக்டர் லியாஷ்கோ குற்றம் சாட்டியுள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை ஆறு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், போர் தாக்குதலை நிறுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையிலும் இருநாடுகளும் ஈடுபாடு காட்டாத வண்ணம் உள்ளனர்.
AFP
இந்தநிலையில் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள மக்களுக்கு உக்ரைன் அரசு மானியத்தில் மருந்துகளை வழங்கும் முயற்சிகளை ரஷ்ய அதிகாரிகள் தடுத்து வருகின்றனர் என அந்த நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் விக்டர் லியாஷ்கோ குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் போர் நடைபெற்று வரும் ஆறு மாதங்களில் ரஷ்யா அறிவித்த மனிதாபிமான வெளியேற்றங்களை சரியான முறையில் நடைமுறைப்படுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார். உக்ரேனிய அரசாங்கம் புற்றுநோய் மற்றும் நாள்பட்ட சுகாதார நிலைமைகள் உள்ளவர்களுக்கு மருந்துகளை வழங்கும் திட்டத்தைக் கொண்டுள்ளது.
AP
மருத்துவமனைகள் மற்றும் உள்கட்டமைப்புகளின் அழிவு மற்றும் நாட்டிற்குள் மதிப்பிடப்பட்ட ஏழு மில்லியன் மக்கள் இடம்பெயர்வதும் மற்ற வகை சிகிச்சைகளில் தலையிட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: வங்கியை கொள்ளையடிக்க போட்ட திட்டம்: சுரங்கப்பாதையில் சிக்கி பொலிஸாரால் மீட்கப்பட்ட திருடன்
மேலும் இந்த நடவடிக்கைகள் ரஷ்யாவால் உள்நோக்கத்துடன் எடுக்கப்படுகின்றன, இவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் என நாங்கள் கருதுகிறோம் எனவும் விக்டர் லியாஷ்கோ தெரிவித்தார்.