புடின் பேசிக்கொண்டிருக்கும்போதே ஒளிபரப்பை நிறுத்திய ரஷ்ய அரசு தொலைக்காட்சி!
மாஸ்கோவின் பிரதான கால்பந்து மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உரையை ரஷ்ய அரசு தொலைக்காட்சி நடுவே நிறுத்தியது.
ரஷ்ய தலைவர் கூட்டத்தில் உரையாற்றுகையில், திடீரென அவரது உரையின் நேரலை துண்டிக்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சி தொடங்கும் முன் ஒளிபரப்பப்பட்ட தேசபக்தி இசையின் கிளிப்பை அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
"நமது தலைசிறந்த ராணுவ வீரர்களில் ஒருவரின் பிறந்தநாளுடன் தற்செயலாக இந்த நடவடிக்கையின் ஆரம்பம் ஒத்துப் போனது..." என்று புடின் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் அவரது உரை துண்டிக்கப்பட்டது.
ரஷ்ய அரசு தொலைக்காட்சி இறுக்கமான கட்டுப்பாட்டில் உள்ளது மற்றும் இத்தகைய குறுக்கீடுகள் மிகவும் அசாதாரணமானது என்பதால் சிறிய பதற்றம் நிலவியது. ஏனெனில் முன்னதாக ரஷ்ய சமூக ஊடக கணக்குகள் சில ஹேக் செய்யப்பட்டன.
Sergei Guneyev / Sputnik Pool Photo via AP
சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு, அவர் மேடையில் இருந்து வெளிநடப்பு செய்வதற்கு முன், புடினின் உரையை அரசுத் தொலைக்காட்சி தொடக்கம் முதல் இறுதி வரை மீண்டும் ஒளிபரப்பியது.
பின்னர் இது குறித்து விளக்கமளித்த கிரெம்ளின், "சேவையகத்தில் தொழில்நுட்ப பிரச்சனைகளால் ஒளிபரப்பு தடைபட்டது" என்று கூறியது.
இந்த நிகழ்ச்சியில், உக்ரைனில் படையெடுத்திருக்கும் ரஷ்ய ராணுவத்திற்கு ஆதரவாகவும், 2014-ல் கிரிமியா தீபகற்பத்தை இணைத்ததை குறிக்கும் விதமாகவும் புடின் பேசினார்.
உக்ரைனில் குழந்தைக்கும் பொலிஸ் தந்தைக்கும் இடையில் நடந்த பாசப்போராட்டம்! கலங்கவைக்கும் வீடியோ
Photo: Sergei GUNEYEV / POOL / AFP