நடுவானில் அமெரிக்க உளவு விமானத்தை துரத்தியடித்த ரஷய் போர் விமானம்! அந்தரத்தில் நடந்த பரபரப்பு சம்பவத்தின் வீடியோ
பசிபிக் பெருங்கடல் மேற்பரப்பில் அமெரிக்க உளவு விமானத்தை ரஷ்ய போர் விமானம் விரட்டிய சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.
சம்பவம் குறித்து ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட அறிக்கையின் படி, ரஷ்ய எல்லையை நோக்கி வந்த விமானத்தை அடையாளம் காணவும், எல்லை மீறுவதை தவிர்க்கவும் கிழக்கு இராணுவ மாவட்டத்தின் விமான பாதுகாப்பு படைகளிலிருந்து MiG-31 புறப்பட்டது.
குறித்த விமானம் அமெரிக்காவின் RC-135 உளவு விமானம் என அடையாளம் கண்ட ரஷ்யாவின் MiG-31 விமானக் குழு, அதை தடுத்து திருப்பி அனுப்பி வைத்தது.
அமெரிக்க விமானத்தை எல்லையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட வின் ரஷ்ய விமானம் விமான தளத்திற்கு திரும்பியது. ரஷ்ய விமானம் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கான சர்வதேச விதிகளின் படி செயல்பட்டது. நாட்டு எல்லை மீறல்கள் தவிர்க்கப்பட்டன என ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
நேட்டோ விமானம் கடந்த ஆண்டு இறுதியில் ரஷ்ய எல்லைக்கு அருகே உளவு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது.
— Иван (@ilax200) April 10, 2021
அமெரிக்கா மற்றும் நேட்டோ போர் விமானங்களின் இத்தகைய வழக்கமான வான்வெளி பயணம் தற்செயலாக அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று ரஷ்ய எச்சரித்துள்ளது.