ரஷ்ய போர் கப்பலை சுற்றி வளைத்து தாக்கிய உக்ரைன்: வைரல் வீடியோ
ரஷ்யாவின் கராகுர்ட் கிளாஸ் கலிபர் தாக்கிய அஸ்கோல்ட் போர் கப்பலை ஏவுகணையால் தாக்கி இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஷ்ய போர் கப்பல் மீது தாக்குதல்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் ஒரு முடிவுரை எழுதப்படாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
உக்ரைன் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் இந்த போரில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
போர் தாக்குதல்கள் ஓரளவு நீர்த்து போய் இருந்தாலும் இருநாடுகளும் அவ்வப்போது தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ரஷ்யாவின் கராகுர்ட் கிளாஸ் கலிப்ர்-கலிபர் தாக்கிய அஸ்கோல்ட் போர் கப்பலை ஏவுகணையால் தாக்கி இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
வெவ்வேறு திசைகளில் இருந்து 3x உக்ரைனின் SCALP-EG குரூஸ் ஏவுகணைகளை ஏவி ரஷ்யாவின் “அஸ்கோல்ட்” போர் கப்பல் தாக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Video of the Russian Karakurt-class Kalibr-carrying Ship “Askold” being hit by 3x Ukrainian ?? fired SCALP-EG Cruise Missiles from different directions
— Ukraine Battle Map (@ukraine_map) November 6, 2023
Such a beautiful sight to see ?
Russia ? claimed it shot down 13 of 15 cruise missiles and that the ship took “light damage” pic.twitter.com/scNkXJbBHE
இது தொடர்பாக ரஷ்யா வெளியிட்டுள்ள விளக்கத்தில், உக்ரைன் ஏவிய 15 குரூஸ் ஏவுகணைகளில் 13 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது.
ஆனால் தப்பிய ஏவுகணைகள் தாக்கியதில் அஸ்கோல்ட் லேசான சேதம் அடைந்ததாக ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |