லிபியா துறைமுகம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: கடலில் மூழ்கிய ரஷ்ய போர்க்கப்பல்
Russian Warship Sinks in Libya after ukraine attack: லிபியா துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய போர்க்கப்பல் உக்ரைன் ட்ரோன் தாக்குதலில் கடலில் மூழ்கியுள்ளது.
கடலில் மூழ்கிய ரஷ்ய போர்க்கப்பல்
கிழக்கு லிபியாவின் பெங்காசி துறைமுகத்தில் உக்ரைனிய படைகள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஏற்பட்ட வெடிவிபத்து மற்றும் தீ விபத்து காரணமாக ரஷ்ய கடற்படை கப்பல் ஒன்று கவிழ்ந்து மூழ்கியுள்ளது.
இந்த தகவலை உள்ளூர் அதிகாரிகள் மற்றும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன.

பெங்காசி கடற்படை தளத்திற்கு அருகில் உள்ள பொதுமக்கள் துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்த இந்த ரஷ்ய போர்க்கப்பலை குறிவைத்து அதிகாலையில் இத்தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது.
உக்ரைனின் இந்த தாக்குதலில் லிபியா மற்றும் ரஷ்ய வீரர்கள் சிலர் உயிரிழந்துள்ளனர்.
ஆனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்கள் இன்னும் தெளிவாக உறுதி செய்யப்படவில்லை.
ஞாயிற்றுக்கிழமை வான்டர் (Vantor) நிறுவனம் வெளியிட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களின் மூலம், ரஷ்ய கடற்படைக்குச் சொந்தமான 'மெர்குரி' (Merkury) ரக சிறிய போர்க்கப்பல் இந்த தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இந்த புகைப்படத்தில் கப்பலின் முன்பகுதி மட்டுமே நீருக்கு வெளியே தென்பட்டது. கப்பலின் பெரும்பாலான பின் பகுதி நீரில் மூழ்கி இருப்பதுடன் கப்பலின் மேல் தளத்தில் புகை வெளியேறி வருவதும் பார்க்க முடிகிறது.