கணவர்களை தேடி உக்ரைனுக்குள் நுழையும் ரஷ்ய மனைவிகள்:தளபதிகளுக்கு இறுதி எச்சரிக்கை!
உக்ரைன் போர் களத்தில் தங்கள் கணவர்களை தேடி ரஷ்ய மனைவிகள் உக்ரைனுக்குள் நுழைய போவதாக ரஷ்ய தளபதிகளை மிரட்டி வருகின்றனர்.
ரஷ்ய படையினர் தலையில் விழுந்த குண்டு
உக்ரைனிய போரில் ஈடுபடுவதற்காக ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடின் நாட்டில் அணி திரட்டலை உத்தரவிட்டு, 300,00க்கும் மேற்பட்ட ரஷ்ய ஆண்கள் சண்டையின் முன்வரிசைக்கு அழைக்கப்பட்டனர்.
இவ்வாறு உக்ரைனுக்குள் அனுப்பப்பட்ட செல்வாக்கற்ற ரஷ்ய படையினர் குழு மீது உக்ரைனிய ராணுவம் சரமாறி வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
Anadolu Agency via Getty Image
இது தொடர்பாக உயிர் தப்பிய ரஷ்ய வீரர் அலெக்ஸி அகபோனோவ் தெரிவித்த தகவலில், 570 பேர் அடங்கிய ரஷ்ய படை குழு மீது உக்ரைனிய படை சரமாறி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
முதலில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பின் பீரங்கி தாக்குதல்கள் இடைவிடாமல் தாக்கியதாகவும் அலெக்ஸி அகபோனோவ் தெரிவித்துள்ளார்.
இதில் படை குழுவின் பெரும்பகுதி அழிக்கப்பட்டு விட்டது என்றும், அதில் இறந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்கள் உக்ரைனிய நகரமான கிராஸ்னோரிசென்ஸ்கேவில்(Krasnorichenske) கைவிடப்பட்டனர் என அலெக்ஸி அகபோனோவ் தெரிவித்துள்ளார்.
Anadolu Agency via Getty Image
கணவர்களை தேடி உக்ரைனுக்குள் நுழைவோம்
இந்நிலையில் உக்ரைனிய பீரங்கி தாக்குதலால் தங்கள் கணவர்களின் படை பிரிவு அழிக்கப்பட்டதை அறிந்த பெரும்பாலான ரஷ்ய படை வீரர்களின் மனைவிகள் ரஷ்ய எல்லை நகரமான வாலுய்கிக்கு(Valuiki) வந்தடைந்துள்ளனர்.
மேலும் ரஷ்ய வீரர்களான தங்கள் கணவர்களை மீட்க ரஷ்ய கமாண்டர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், அவர்களை மீட்க தாங்களே போர் நடைபெறும் உக்ரைனிய நகரத்திற்குள் நுழைவோம் என மிரட்டியுள்ளனர்.
Telegram
ரஷ்ய வீரர்களின் மனைவி ஒருவர் பேசிய போது, தளபதிகள் ஏதாவது செய்ய வேண்டும், அவர்கள் சில முடிவுகளை எடுக்க வேண்டும், தளபதிகள் அங்கு பலர் காயமடைந்திருப்பதால் அவர்களை அங்கிருந்து அழைத்து வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என தெரிவித்துள்ளனர்.
Telegram