பிறந்த குழந்தையை கழிவறையில் கைவிட்ட 18 வயது ரஷ்ய பெண்! 15 ஆண்டுகள் சிறை விதித்த துருக்கி நீதிமன்றம்
ரஷ்யாவைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் விமான நிலைய கழிவறையில் பிறந்த குழந்தையை கைவிட்டதற்காக, துருக்கி நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
18 வயது ரஷ்ய பெண்
துருக்கி நாட்டின் அன்டலியா விமான நிலையத்தில், கழிவறை அறையில் bowlயில் புதிதாக பிறந்த குழந்தையை தூய்மைப்பணியாளர்கள் கண்டுபிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து, ரஷ்யாவைச் சேர்ந்த Yekaterina Burnashkina என்ற 18 வயது பெண் மற்றும் அவரது 47 வயது தாயாரையும் கைது செய்த பொலிஸார் அவர்கள் மீது வழக்கப்பதிவு செய்தனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நீதிமன்ற ஆணைப்படி, கழிப்பறையில் மீட்கப்பட்ட குழந்தை ஆதரவற்றோர் இல்லத்தில் வைக்கப்பட்டது.
Yekaterina மீதான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அவர் குற்றவாளி என உறுதிப்படுத்தி அன்டாலியாவின் நான்காவது உயர் குற்றவியல் நீதிமன்றம், அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதாக அரசு நடத்தும் RIA Novosti செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு
இந்த மாத தொடக்கத்தில், அன்டால்யாவில் உள்ள ரஷ்யாவின் துணைத் தூதர் செர்ஜி வெட்ரிக், தண்டனை பெற்ற இளம்பெண்ணை மீண்டும் ரஷ்யாவிற்கு அழைத்து வர தனது இராஜதந்திர பணி செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
ஆனால் அவர் சமீபத்திய தீர்ப்பு குறித்து ரஷ்ய தூதரகம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில், Yekaterina-வுக்கு எந்த குற்ற நோக்கமும் இல்லை என்று வாதிட்ட அவரது வழக்கறிஞர், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக RIA Novosti ஊடகத்திடம் தெரிவித்தார்.
இருப்பினும் Yekaterinaவை ரஷ்யாவிற்கு நாடு கடத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் அவர் குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |