உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக போர்க்களத்தில் களமிறங்கிய ரஷ்யர்கள் படை! வீடியோ ஆதாரம்
உக்ரைனுக்கு ஆதரவாக போர்க்களத்தில் ரஷ்ய படை களமிறங்கியுள்ளதாக ஐரோப்பிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்ய படைகளுக்கு எதிராக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் உக்ரைனுக்கு பயணித்து ஆயுதமேந்தியிருக்கின்றனர்.
இதில் ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் நாட்டவர்களும் அடங்கும்.
இந்நிலையில், பெலாரஸியர்கள் மட்டுமின்றி ரஷ்யர்களும் உக்ரைனுக்கு ஆதரவாக போர்க்களத்தில் களமிறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Freedom of Russia படை உக்ரைன் போர்க்களத்தில் களமிறங்கியுள்ளனர். உக்ரைன் ஆதரவு ரஷ்யர்களால் இந்த Freedom of Russia படைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
Not only #Belarusians, but also Russians are fighting on the side of Ukraine. The "Freedom of #Russia" Legion goes to the front.
— NEXTA (@nexta_tv) April 29, 2022
Units of "Freedom of Russia" Legion, formed of pro-Ukrainian Russians, moved to battlefields in the east of #Ukraine after two months of training. pic.twitter.com/9zofHeeMSn
தடையின்றி மின்சாரம்... உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டிய எலான் மஸ்க்!
2 மாத பயிற்சிக்கு பிறகு Freedom of Russia படை போர்க்களத்திற்கு சென்றுள்ளனர். ஆயுதமேந்திய வீரர்கள் ஒரு வாகனத்தில் ஏறிச் செல்லும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.