தங்கத்தை வாங்கிக் குவிக்கும் ரஷ்ய மக்கள்., ஏன்?
உயர் பணவீக்கம், தடைகள் காரணமாக ரஷ்யர்கள் அதிகளவில் தங்கத்தை வாங்குவதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவில் தங்கம் வாங்குதல் வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது என்று உலக தங்கக் கவுன்சில் (World Gold Council) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2024-இல் ரஷ்யர்கள் 75.6 மெட்ரிக் டன் தங்கம் வாங்கியுள்ளனர், இது 2023-ஐ விட 6 சதவீதம் அதிகமாகவும், 2021-ஐ விட 62 சதவீதம் அதிகமாகவும் உள்ளது.
ஏன் தங்கம் வாங்குவது அதிகரித்துள்ளது?
உயர் பணவீக்கம் - 2024-இல் 9.5 சதவீதம் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது.
ரூபிளின் மதிப்பு சரிவு - பன்னாட்டு தடைகள் காரணமாக ரஷ்யன் ரூபிளின் மதிப்பு சரிந்துள்ளது.
மேற்கத்திய பொருளாதார தடைகள் - ரஷ்யர்கள் தங்கள் பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்ய முடியாமல் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக பார்க்கிறார்கள்.
ரஷ்ய அரசு மகிழ்ச்சி அடைகிறதா?
ரஷ்ய அரசு ஆண்டுக்கு 300 மெட்ரிக் டன் தங்கத்தை சுரங்கத்திலிருந்து எடுக்கறது.
மக்கள் அதிகளவில் தங்கம் வாங்குவதால், ரஷ்ய அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.
முன்பு ரஷ்யாவின் மத்திய வங்கி உலகின் மிகப்பெரிய தங்கம் வாங்கும் அமைப்பாக இருந்தது, ஆனால் தற்போது அதில் குறைவு ஏற்பட்டுள்ளது.
2024-இல் தங்கத்தின் விலை 28% உயர்ந்துள்ளது. 2025 தொடங்கியதிலிருந்து 10% கூடுதல் உயர்வு ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 2025-இல் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,902 டொலர் என்ற வரலாற்று உயர்வை எட்டியுள்ளது.
உலக சந்தையில் தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடு என பார்க்கப்படும் நிலையில், ரஷ்யர்கள் தங்கத்தை அதிகமாக வாங்குவதன் மூலம் பொருளாதார பாதிப்புகளை சமாளிக்க முயல்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |