உக்ரைனில் கொள்ளையடித்த ரஷ்ய வீரர்கள்! சிசிடிவி-யில் சிக்கிய காட்சி
உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா இராணுவ வீரர்கள், அங்கு கடை ஒன்றில் புகுந்த கொள்ளையடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 4வது நாளாக போர் தொடுத்து வரும் ரஷ்யா படை, உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவில் நுழைந்துள்ளது.
கார்கிவ் தெருக்களில் உக்ரைன்-ரஷ்ய படைகளுக்கு இடையே பயங்கர மோதல் இடம்பெறுவருகிறது.
பயங்கர மோதல் இடம்பெற்று வருவதால், கார்கிவ் நகர மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என உக்ரைன் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, உக்ரேனிய கடை ஒன்றில் புகுந்த ரஷ்யா இராணுவ வீரர்கள், அங்கிருந்து பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இச்சம்பவம் அக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பாதிவாகியுள்ளது.
அதில், கும்பலாக கடைக்குள் புகுந்த ரஷ்ய வீரர்கள், அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை பையில் போட்டு எடுத்துச்செல்கின்றனர்.
இச்சம்பவம் உக்ரைனில் எந்த பகுதியில் நடந்தது என்பது தெரியவில்லை.
Occupiers looting a #Ukrainian store pic.twitter.com/jPKbHLDEeR
— NEXTA (@nexta_tv) February 27, 2022